எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் நடித்துள்ள 'சலார்' படம் டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் மிகப் பெரும் வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்குத் திரையுலகத்தில் பெரிய படங்களுக்கான அதிகபட்ச டிக்கெட் கட்டணத்தை தெலங்கானா, ஆந்திர அரசுகள் நிர்ணயம் செய்கின்றன. அதன்படி தெலங்கானாவில் சிங்கிள் தியேட்டர்களுக்கு ரூ 65 அதிகமாவும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு ரூ 100 அதிகமாகவும் உயர்த்திக் கொள்ள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தெலங்கானாவில் சிங்கிள் தியேட்டர்களில் கட்டணம் 253 ரூபாயாகவும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் கட்டணம் 413 ரூபாயாகவும் உயரும். அது மட்டுமல்லாது அதிகாலை 1 மணி காட்சிகளுக்கும் நாள் ஒன்றிற்கு சில இடங்களில் 7 காட்சிகள் மற்ற இடங்களில் 6 காட்சிகள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர அரசு அதன் ஆணையில் 40 ரூபாய் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி சிங்கிள் தியேட்டர்களில் கட்டணம் ரூ 194 ஆகவும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூ 224 ஆகவும் உயரும். இக்கட்டணத்தை டிசம்பர் 31 வரை வைத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கு மாநிலங்களில் இரு வேறு விதமான கட்டணங்களுடன் 'சலார்' படம் வெளியாக உள்ளது. அரசு ஆணைகளுக்குப் பிறகு தற்போது முன்பதிவுகள் ஆரம்பமாகி இருக்கிறது.