ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சிவா இயக்கத்தில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் சரித்திரப் படம் 'கங்குவா'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சில வாரங்கள் நடைபெற உள்ள இந்தப் படப்பிடிப்பு கடைசி கட்ட படப்பிடிப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பும் முடிவடைய உள்ளதாம்.
சூர்யா நடித்து இந்த 2023ம் ஆண்டில் ஒரு படம் கூட வரவில்லை. கடந்த வருடத்திலிருந்தே அவர் இந்த ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இப்படம் அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3 டி மற்றும் ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாக உள்ள இப்படம் அடுத்த ஆண்டில் வெளியாக உள்ள படங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு படமாக இருக்கிறது.
இப்படத்தை முடித்த பின் இயக்குனர் சிவா, அஜித் நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகி உள்ளது. அப்படம் சூர்யாவின் 43வது படமாகத் தயாராக உள்ளது.




