சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' |
தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ-ரிலீஸ் என்பது வர ஆரம்பித்துவிட்டது. டிஜிட்டலுக்கு சினிமா மாறிய பிறகு இந்த ரீ-ரிலீஸ் என்பது அடியோடு குறைந்து போனது. அதன்பின் சில கிளாசிக் திரைப்படங்களை தொழில்நுட்ப ரீதியாக தரம் உயர்த்தி வெளியிட்டு நல்ல வசூலைப் பெற்றார்கள். அதே வழியைத் தற்போது சில படங்களுக்கும் பின்பற்ற ஆரம்பித்துள்ளார்கள்.
இன்று டிசம்பர் 8ம் தேதி மட்டும் மூன்று படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன. கமல்ஹாசன் நடித்து 2001ம் ஆண்டு வெளிவந்த படம் 'ஆளவந்தான்'. டெக்னிக்கலாக அப்படம் மிகவும் பேசப்பட்டாலும் படுதோல்வியை அடைந்தது. 2 மணி நேரம் 58 நிமிடங்கள் ஓடக் கூடிய அந்தப் படத்திலிருந்து சுமார் 55 நிமிடக் காட்சிகளை 'டிரிம்' செய்து நீக்கி விட்டு இப்போது 2 மணி நேரம் 3 நிமிடம் மட்டுமே ஓடக் கூடிய படமாக ரீ-ரிலீஸ் செய்கிறார்கள்.
அடுத்து ரஜினிகாந்த், மீனா நடித்து 1995ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'முத்து'. அப்படத்தை டிஜிட்டலில் மாற்றி வெளியிடுகிறார்கள். இப்படத்தை எந்த விதத்திலும் டிரிம் செய்யவில்லை, அதே இரண்டே முக்கால் மணி நேரப் படமாகவே வெளியிடுகிறார்கள்.
இன்று வெளியாகும் மற்றொரு ரீ-ரிலீஸ் படம் 'புதுப்பேட்டை'. செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடித்து 2006ம் ஆண்டு வெளிவந்த படம். விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற படம், வியாபார ரீதியாக அப்போது தோல்வியடைந்தது. அப்படத்தை இன்று குறைவான தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்கிறார்கள்.
ஒரே நாளில் இப்படி மூன்று முன்னணி நடிகர்களின் படங்கள் ரீ-ரிலீஸ் ஆவது ஆச்சரியம்தான்.