பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் | ஒரே ஆண்டில் 80 கோடி வரி செலுத்தி விஜய் சாதனை | கனடா நாடாளுமன்றத்தில் கருணாசுக்கு கவுரவம் | கன்னட நடிகை ஷோபிதா மரணம் | தமிழ் ஹீரோக்களுக்கு சறுக்கலைத் தந்த சரித்திரப் படங்கள் | ‛காந்த கண்ணழகி' பெயர் சில்க் ஸ்மிதாவிற்கு தான் பொருந்தும்... - கனவாய் கலைந்து போன கவர்ச்சி தாரகை | பிளாஷ்பேக்: வேஷமிட்டு வாய்ப்பைப் பெற்ற ஜெமினிகணேசன் | டிசம்பர் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான் ; உற்சாகத்தில் ராஷ்மிகா | அபிஷேக் பச்சன் விஷயத்தில் ஐஸ்வர்யா ராய் ஏற்படுத்திய குழப்பம் ; தெளிவுபடுத்திய நிறுவனம் | காவாலா பாடலுக்கு என் முழு பங்களிப்பை கொடுக்கவில்லை ; தமன்னா வருத்தம் |
பாலிவுட்டின் அடுத்த கட்ட வாரிசு நடிகர்கள் 'த ஆர்ச்சிஸ்' படம் மூலம் களமிறங்கியிருக்கிறார்கள். ஷாரூக்கானின் மகள் சுஹானா கான், அமிதாப்பச்சனின் பேரன் அகஸ்திய நந்தா, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் ஆகியோர் அப்படம் மூலம் அறிமுகமாகிறார்கள்.
இப்படத்திற்கான பிரிமியர் காட்சி மும்பையில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. வாரிசு நடிகர்களின் குடும்பத்தினர் பலரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். நடிகர் ஷாரூக்கான் அவரது மனைவி கவுரி கான், மகன்கள் ஆர்யன் கான், அப்ராம், மகள் சுஹானா கான் மற்றும் மாமியார் சவிதா ஆகியோருடன் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்வில் ரெட் கவுன் அணிந்து வந்த மகளின் கையைப் பிடித்து ஷாரூக் நடந்து வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோ குறித்து பழைய வீடியோ ஒன்றுடன் ரசிகர்கள் ஒப்பிட்டுப் பேசி வருகிறார்கள்.
2011ம் ஆண்டு நடைபெற்ற பிலிம்பேர் விருது நிகழ்வில் சிறந்த நடிகருக்கான விருது பெற்று ஷாரூக் பேசும் போது, “எனது மகளுக்கு உடல்நிலை சரியில்லை. ரெட் கவுன் அணிந்து கொண்டு, இந்த ரெட் கார்ப்பெட்டில் அவர் நடந்து வரவேண்டும் என்று விரும்பினேன்,” எனக் கூறியிருந்தார்.
பத்து வருடங்களுக்கு முன்பு ஷாரூக் பேசியது போல இப்போது நடந்துள்ளதால் இரண்டையும் வைத்து ஷாரூக்கின் ஆசை நிறைவேறியது குறித்து அவரது ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள்.