அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான பப்லு பிரித்விராஜ் தன்னை விட முப்பது வயது குறைந்த ஷீத்தல் என்பவருடன் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் அறிவித்திருந்தனர். அடிக்கடி சோஷியல் மீடியாவில் ஜோடியாக புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர்.
ஆனால், தற்போது பப்லு மற்றும் ஷீத்தல் இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராமில் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கியுள்ளனர். இதனால் இருவரும் பிரிந்துவிட்டனரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. மேலும், ஷீத்தல் வெளியிட்ட மற்றொரு வீடியோவில் ரசிகர் ஒருவர் இருவருக்கும் ப்ரேக்கப்பா? என்று நேரடியாக கேட்க ஷீத்தல் அதற்கு பதில் எதுவும் கூறாமல் அதற்கு லைக் மட்டும் போட்டுள்ளார். இதனால் இருவரும் பிரிந்துவிட்டது உறுதியாகிறது.