சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா படத்தில் கூர்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் சந்திரகாந்த். இயக்குநர் பாலசந்தரால் நடிகராக அறிமுகமான சந்திரகாந்த், பல படங்களில் நடித்துள்ளதுடன் திரைப்பட எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளார். அவர் தற்போது சிங்கப்பெண்ணே தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த தொடரின் இயக்குநரான தனுஷ்கிருஷ்ணா சந்திரகாந்தின் நண்பர் ஆவார். அவரது அழைப்பின் பெயரில் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள சந்திரகாந்த் தனக்கு சீரியலில் நடிக்கும் ஐடியாவே கிடையாது என்று பேட்டி அளித்துள்ளார்.