மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? | இன்று 7 படங்கள் ரிலீஸ் : முன்பதிவு நிலவரம் என்ன? | தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‛லால் சலாம்'. ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தை அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லால் சலாம் படத்தின் டீசர் தீபாவளி தினமான நவ.,12ம் தேதி காலை 10:45 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தீபாவளி தினத்தில் வெளியாவதால் டீசர் வீடியோ ரஜினி ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசர் ரன்னிங் டைம் 1 நிமிடம் 34 வினாடிகள் எனக் கூறப்படுகிறது.