இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இறுகப்பற்று படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடித்துள்ள படம் ரெய்டு. ஆக்ஷன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இவர்களுடன் சவுந்தரராஜா, ரிஷி ரித்விக், அனந்திகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்தி இயக்கி இருக்கிறார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ள இந்த ரெய்டு படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில் அழகுச் செல்லம் என்ற இரண்டாவது பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ரவுடிகளை களையெடுத்து நகரை தூய்மையாக வைக்க போராடும் அதிரடி ஆக்ஷன் போலீஸாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். ‛‛ரவுடிசத்துக்கு ஒரு பிராண்ட் கிரியேட் பண்ணப்போறேன், சிட்டியில் என்ன தவிர வேறு எந்த ரவுடியும் இருக்க கூடாது'' போன்ற விக்ரம் பிரபு பேசும் வசனங்கள் கவனம் ஈர்த்துள்ளன.
இப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற பத்தாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.