ரஜினி என்ற ஒரு பெயருக்காகதான் நடிக்கிறேன் : கன்னட நடிகர் உபேந்திரா | வெற்றி தீபம்... ஜனநாயகத்தின் ஒளி... : அரசியல் படமா... ‛விஜய் 69' | திருமண சடங்கான மெஹந்தி புகைப்படங்களை வெளியிட்ட மேகா ஆகாஷ் | ‛வேட்டையன்' படம் பற்றி மஞ்சு வாரியர் என்ன சொல்கிறார் | அரசியல் பேசும் சசிக்குமாரின் நந்தன் : டிரைலர் வெளியானது | மீண்டும் ஜோடி சேரும் விஜய், பூஜா ஹெக்டே | என் தந்தையே எனது மிகப்பெரிய விமர்சகர் : பாடகி டூ நடிகை த்வானி பனுஷாலி பேட்டி | ஸ்பெயின் பறக்கும் ‛குட் பேட் அக்லி' படக்குழு | மீண்டும் தனுஷ் இயக்கத்தில் ராஜ் கிரண் | பிரதர் படத்தின் டப்பிங் பணியை முடித்த ஜெயம் ரவி |
பூமிக்கு தவறிவந்த தேவதையா... வானவில்லின் நிழலா... மயிலிறகின் நகலா... அன்பின் பிறையா... அழகின் அறிவியலா... விஞ்ஞானம் வியந்த படைப்பா... உலகம் அறியா அதிசயமா... சித்திரம் மயங்கின சிற்பமா... என வர்ணனைக்கு அப்பாற்பட்டவர். அலைபாயும் இளையோர் கூட்டம், வேல் வீசும் விழி, பால் பொங்கும் புன்னகையுடன் ராமநாதபுரத்தில் பிறந்து தலைநகரில் தனியிடம் பிடித்த நம்ம ஊரு பொண்ணான நடிகை திய்வா கணேஷ் தினமலர் வாசகர்களுக்காக பகிர்ந்தது...
நீங்க ராமநாதபுரம் பெண்ணாமே...
ஆமாங்க... ராமநாதபுரம் தான். பள்ளி, கல்லுாரி காலம் எல்லாமே அங்கதான். வீட்டின் கடைக்குட்டி. சினிமா துறைக்கும், குடும்பத்திற்கு சம்மந்தமே இல்லை. நான் தான் முதல் ஆள்
நடிப்பு கலையின் ஆரம்பம்...
மேற்படிப்பிற்காக சென்னை வந்தேன். அக்கா இங்கதான் இருக்காங்க. விஸ்காம் மாணவர்களின் குறும்படத்தில் தொடங்கி, அதற்கு பணிபுரிய வந்த சீனியர் உதவி இயக்குநர் மூலமாக தொலைக்காட்சியில் சிறிய ரோலில் நடித்தேன். எல்லாமே எனக்கு புதிதுதான். கொஞ்சம் கொஞ்சமாக பழகி பின்னாளில் கேளடி கண்மணி, லட்சுமிவந்தாச்சு, பிரியமானவள் உள்ளிட்ட சீரியல்களில் கேரக்டர் ரோலில் நடித்தேன். மெயின் லீட் கேரக்டராக நடித்தது சுமங்கலி சீரியல்தான். தமிழ்நாடு கூட தாண்டாத எனக்கு தெலுங்கில் ஒரு வாய்ப்பு வந்தது. மொழி தெரியாமல் சிரமப்பட்டேன். தமிழில் வந்த நாயகி சீரியல் தெலுங்கில் எடுக்கப்பட்டது. அதில் நடித்தேன். இப்படித்தான் தொடங்கியது பயணம்.
சினிமா வாய்ப்பு...
'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளேன். அதில் நான் நடித்த கேரக்டர் அனைவருக்கும் பிடித்திருந்தது. இந்தியன் 2வில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளேன்.
சீரியல் டூ சினிமா வரவேற்பு எப்படியிருக்கு
நல்ல வரவேற்பு இருக்கிறது. எங்கு சென்றாலும் எளிதாக அடையாளம் கண்டுபிடித்து விடுகின்றனர். இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பேசுறது பிடிக்கும். நான் கொஞ்சம் மனச்சோர்வாக இருந்தால் இன்ஸ்டா பக்கம் போனா போதும் ரசிகர்களின் கேள்வி, அதற்கு நம்மளோட பதில் அப்படியே மைண்ட் சேஞ்ச் ஆய்டும்.
புடிச்சவங்க யாரு... யாரு படத்தில் நடிக்கனும் ஆசை...
திரிஷாவ ரொம்ப பிடிக்கும். வெற்றிமாறன் படத்தில நடிக்கனும்னு ஆசை. வட சென்னை படம் பார்த்தலிருந்தே அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருப்பேன். இந்தியன் 2வில் முதல் நாளே கமல் சாரோட நடித்தேன். அவரிடம் நானும் உங்கள் ஊர் என சொன்னேன். அவர் எப்படி வீட்டுல விட்டாங்கனு கேட்டாரு, நல்லா பெரிய ஆளா வரணும் என வாழ்த்தினாரு. அது மகிழ்ச்சியாக இருந்தது.
பெண்களுக்கு அட்வைஸ்
நான் சொல்வது ஒரே அட்வைஸ்தான் நல்லா படிங்கனு மட்டும்தான். பல துறைகளில் பெண்கள் சாதிக்க வேண்டும். எந்த சூழலையும் எதிர்கொள்ள பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்.
உங்களோட ஆசைதான் என்ன
எனக்கு லா படிச்சு அட்வகேட் ஆகி, ஜட்ஜ் ஆக வேண்டுமென்பதே கனவு. அது தற்போது வரை கனவாகவே இருக்கிறது. வாய்ப்பிருந்தால் எதிர்காலத்தில் முயற்சிக்க வேண்டும்.
பிட்னஸ் ரகசியம்
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்துகிறேன். சூட்டிங் இருந்தாலும் கட்டாயம் ஜிம்முக்கு போய்டுவேன். உணவு விஷயத்திலும் கவனமாக இருப்பேன்.