Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சான்ஸ் கேட்டு நச்சரிக்கும் நடிகை அல்ல நான் - ரம்பா 'பளீர்'

29 அக், 2023 - 12:15 IST
எழுத்தின் அளவு:
Actress-Rambha-exclusive-interview

'அழகிய லைலா; அவள் இவளது ஸ்டைலா. சந்தன வெயிலா; இவள் மன்மத புயலா' என ஆரவார ஆட்டத்தால், சூப்பர் ஸ்டைலால் ரசிகர்களை கலக்கியவர் ரம்பா. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரசிகர்களின் உள்ளங்களை ரவுண்ட் கட்டி அடித்தவர், தற்போது, தொழிலதிபரை மணந்து குடும்பத்தலைவியாய் கனடாவில் வசிக்கிறார். அவருடன் ஒரு பேட்டி...
உங்க குழந்தைகளுக்கு நீங்க சமைக்கிறது என்ன விரும்பி சாப்பிடுவாங்க?
என் பசங்களுக்கு சின்ன வயசுல இருந்து எல்லா வகையான உணவும் கொடுத்து பழக்கப்படுத்தி இருக்கேன். ராகில ஆரம்பிச்சு பூரி, கிழங்கு, சப்பாத்தி, அரிசி சாதம் இப்படி எல்லாமே நான் சமைப்பதை விரும்பி சாப்பிடுவாங்க
இப்பவும் படங்களில் நீங்க நடிக்கிறதுக்கு வாய்ப்பு வருதா?
தெலுங்கில் தொடர்ந்து பட வாய்ப்பு வந்துகிட்டு தான் இருக்கு.. என் நடிப்பு துறை, குடும்பம் இரண்டும் என்னால அட்ஜஸ்ட் பண்ண முடியல.. ஒரு நடிகை இறக்கும் வரையில் நடிப்பு ஆரவம் இருக்கும்.. என் பசங்க கொஞ்சம் இப்போ நல்லா புரிந்துகுறாங்க.. இப்போ எனக்கு பிராப்ளம் இல்ல. என் பெயரை காப்பாற்றுகிற மாதிரி நல்ல படங்கள் நல்ல ரோல் வந்துச்சுனா நடிக்கிறதுக்கு வரலாம்.. அதுக்காக திரைத்துறையில் உள்ளவர்களிடம் போன் போட்டு நச்சரிச்சு எனக்கு வாய்ப்பு கொடுங்கன்னு எல்லாம் கேட்க மாட்டேன்
நீங்க பிஸியா நடிக்கும் போது உள்ள சினிமாவுக்கும் இப்போ உள்ள சினிமாவும் மாறி இருக்கா?
சினிமா எப்பவும் ஒரே மாதிரி தான் இருக்கு. ஆனா அதுக்குள்ள வரக்கூடிய ஆட்கள் தான் அப்பப்போ மாறுவாங்க.. நான் வேலை பார்த்தபோது இருந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் எல்லாருமே இப்பவும் நான் தொடர்புல தான் இருக்கேன். நல்ல முறையில் நட்போடு பேசி கொள்கிறோம். இப்போ புதுசா வரக்கூடியவர்களை பற்றி எனக்கு அவ்வளவா தெரியல, ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி மாற வாய்ப்பு இருக்கு.. நான் எலோரிடமும் அட்ஜஸ்ட் பண்ணி போற டைப். நோ பிராப்ளம் எனக்கு.
நீங்க தமிழ் சினிமால யார் கூட நடிக்கலன்னு உங்களுக்கு வருத்தம்?
எல்லா மொழிகளையும் கிட்டத்தட்ட பல நடிகர்கள் கூட சேர்ந்து நடிச்சிட்டேன்னு நினைக்கிறேன். தமிழ்ல விக்ரம் சார் கூட சேர்ந்து நடிக்கல, ஆனா தெலுங்குல ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சோம். ஆனால் அவருக்கு வேற ஹீரோயின், எனக்கு வேற ஹீரோ.. தமிழ் ல நடிக்க முடில
ரம்பாவை பத்தி சொல்லனும்னா?
நான் ரொம்ப ஸ்ட்ரைட்டா பேசுறவ. எதையும் மனதில் வச்சிக்க மாட்டேன். யாருடையும் எளிமையா பழகுவேன், ரொம்ப கடினமா உழைக்கணும் என்று நினைப்பேன். ரொம்ப சின்சியரா இருப்பேன், யாராவது சின்ன பொய் சொன்னாலும் எனக்கு டக்குனு கோவம் வரும்.. சிலர் சின்ன வேலை பார்த்திருப்பாங்க ஆனா ரொம்ப பெருசா பேசுவாங்க. அதெல்லாம் எனக்கு பார்த்தா கொஞ்சம் வருத்தம் வரும்; என்ன இப்டி பேசுறாங்க என்று.. முடிந்தவரை அதிகமா பேசுறவங்கள நான் அவாய்ட் பண்ணுவேன். எல்லார் கூடயும் பிரெண்ட்லியா இருந்துட்டு பிரெண்ட்லியா பழகணும்னு நினைப்பேன். இதுக்கு மேல நான் போக மாட்டேன்
எந்த மாதிரியான உடைகள் உங்களுக்கு மிகவும் பிடித்தது?
எல்லா வகையான டிரெஸ்ஸும் எனக்கு ரொம்ப நல்லா இருக்குன்னு எல்லாரும் சொல்வாங்க.. எட்டு மொழிகள்ல தொடர்ந்து நடிச்சேன் தமிழ்ல இருக்கிற அதே காஸ்ட்யூம் ஹிந்திலயும், அதே காஸ்டியும் தெலுங்குலயும், இப்படி எல்லா மொழிகளையும் கிட்டதட்ட ஒரே மாதிரி காஸ்ட்யூம் தான் எனக்கு கம்போர்ட். கனடாவுல நான் வசிக்கிறேன், கோயில் போறப்ப எல்லாம் புடவையில் தான் போவேன்.. அதே மாதிரி கனடாவில் ஏதாவது நைட்ல சாப்பிட போறோம் ஹோட்டல் போனோம் அப்படின்னா மடரன் ட்ரெஸ் ல போவேன். எனக்கு உடைகள் பெரிய பிரச்னை இல்லை
உங்க குழந்தைகளுக்கு நடிப்பில் ஆர்வம் இருக்கா?
ஆமா. 3 பேரும் ரொம்ப திறமை.. மூத்த மகள் லான்யா நல்ல அழகு..அவளுக்கு ஆசை.. பையன் செம்ம சுறுசுறுப்பு . ஆனா நான் என்ன நினைப்பேனா குழந்தைகளுக்கு படிப்பு ரொம்ப முக்கியம்.. அவங்க 10 , 12 வயசுக்கு மேல அவங்க தான் அவங்க துறையை தேர்ந்தெடுக்கணும்.. என் மகள் லான்யாவுக்கு பட வாய்ப்புகள் வந்தாலும், அவள் தந்தை தொழிலை அவள் தான் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது..

அடுத்த பொண்ணுக்கும் அந்த ஆசை. 2,3 துறை அவங்களுக்கு சாய்ஸ் இருக்கு.. அவங்க எனக்கு ஐடியா சொல்றாங்க.. நான் சின்ன வயசுல இருந்து அவங்களுக்கு சொல்றது ஒன்னு தான் எப்பவும் சோம்பேறியா இருக்க கூடாது, ஆக்டிவா சுறுசுறுப்பா ஏதாச்சு ஒன்னு பண்ணிட்டு இருக்கணும்னு சொல்லி இருக்கேன் அது அவங்களும் பாலோ பண்றாங்க. பணம் எவ்ளோ முக்கியம்னு சொல்லி கொடுத்திருக்கேன். எல்லாத்துக்கும் கடவுள் ஆசிர்வாதம் வேணும்.. அவங்க எந்தத் துறைக்கு போனாலும் அவங்களுக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன்
பாலியல் தொல்லைகள் குறித்து?
சினிமாவுல மட்டுமில்ல எல்லா துறையிலும் இந்த பிரச்னை இருக்கு. சில நல்லவங்களும் எல்லா இடத்திலும் இருக்காங்க.. எனக்கு கிடைத்த வாய்ப்பு நான் நடித்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், எல்லாரும் என்னோட ரொம்ப நல்ல முறையில் நடந்துட்டாங்க. நானும் அவங்க கிட்ட மிகவும் மரியாதையாக தான் நடந்து இருக்கேன்.

இந்த பாலியல் பிரச்னை விஷயத்தை தைரியமா வெளியில வந்து சொல்றவங்களை நான் பாராட்டுறேன்.. சப்போர்ட் பண்றேன்... ஆனால் இதை விளம்பரமா பயன்படுத்தக் கூடாது.. அப்படி ஒரு நிகழ்வை உடனே வெளில கொண்டு வரணும்.. தாமதித்து பிறகு பேச கூடாது.. ஒரு பெண் தைரியமா நோ சொல்லணும்.. படப்பிடிப்பு தளங்களில் என்னை சொந்த பொண்ணா நினைச்சாங்க.. யார் நெருங்கினாலும் உடனே அதற்கு பதில் கொடுத்து விடுவேன்
திருமணம் பிறகு வரும்போது மொழி தெரியாமல் எப்படி இங்கே சமாளித்தீர்கள்?
எனக்கு இங்கே மொழி பிரச்னை ரொம்ப அதிகமா இருந்தது.. நான் சொல்றது அவங்களுக்கு புரியாது. அவங்க சொல்றது எனக்கு புரியாது.. நான் இங்க வந்த சமயம் ரொம்ப புத்திசாலி கிடையாது. வெளி உலகமே தெரியாத ஒரு பொண்ணா இருந்தேன்.. அப்பா, அம்மா ஒரு ஊர்ல இருந்தாங்க.. நான் ஒரு ஊர்ல இருந்தேன். வீடு பார்க்கணும்.. இப்படி எனக்கு நிறைய பொறுப்புக்கள் ஆரம்பத்திலேயே வந்தது.. எத்தனை கஷ்டத்தையும் சமாளிக்கணும் அப்படின்னு எனக்கு சொல்லிக் கொடுத்ததே இந்த சினிமா தான்.. ரொம்ப அமைதி, பொறுப்பு எல்லாமே கத்துகிட்டேன். ஆரம்பத்தில் குடும்பத்தில் சிறு சிறு பிரச்னை வந்தது. எல்லாம் சமாளித்து இப்போது வெற்றியா குடும்ப தலைவியாக குழந்தைகளை பார்த்து கொண்டு நல்லபடியா இருக்கேன்..
பெண்கள் இப்போது நிறைய விவாகரத்து, மன அழுத்தம் அதிகமாகி, தற்கொலை செய்வது பற்றி உங்க கருத்து என்ன?
ஒரு பொண்ணுக்கு உடனே மன அழுத்தம் வராது.. பல வருஷமா மனசுக்குள்ள போட்டு அழுத்திட்டு இருந்தா தான் ஒரு நாள் அது வெடிக்கும். திருமணத்துக்குப் பிறகு அவர்களை தனியே விடுங்க. இரண்டு வீட்டாரின் தலையீடு குடும்பத்தில் அதிகம் இருக்கக் கூடாது.. அதுவும் இப்போது சில குடும்பங்கள் பிரிவுக்கு காரணம். பெண்களுக்கு அவசரம் எதிலும் வேண்டாம்; பொறுமை ரொம்ப அவசியம். விட்டு கொடுப்பது, உண்மையான லவ் எல்லாம் வாழ்க்கையில் ரொம்ப முக்கியம். எதிர்காலம் பற்றி திட்டமிட கொஞ்சம் கால அவகாசம் தேவை. ஈகோ எப்பவும் வர கூடாது. 2 பேருக்கும் ஒருவர் மேல ஒருவர் நம்பிக்கை இருக்கணும்.. வாழ்க்கை மன அழுத்தம் வரை போக கூடாது.
புதிதாக வரும் நடிகைகளுக்கு நீங்க சொல்ல விரும்புவது?
கடினமா உழைங்க உங்க வாழ்க்கைய மட்டும் எதிர்நோக்கி வாழுங்க. உங்களை நீங்க முதலில் நேசியுங்கள். உங்கள் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். அதுதான் உங்கள் மிக பெரிய சொத்து.
விஜய் அரசியலுக்கு வருவது பற்றி?
நான் விஜய்யோடு நடித்த பல படங்கள், பாடல்கள் ஹிட் ஆகிருக்கு.. ரொம்ப தெளிவான நடிகர் விஜய். ஒரு பாட்டு ஆனாலும் அவ்ளோ எபோர்ட் போடுவார்.. நடிகர்கள் அரசியலுக்கு வருவது எம்ஜிஆர் காலத்திலிருந்து இருக்கு; அதை நாம என்கரேஜ் தான் பண்ணனும். விஜய்க்கு திறமை இருந்தால் அவர் ஜெயிப்பார். ஏன் வரணும் வர கூடாது என்று நான் பேச கூடாது.. மக்கள் தான் பேசணும் இப்போ மக்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க. இப்போ இருக்கும் அரசியல் நல்லா தான் இருக்கு. மேலும் நல்லது செய்ய யார் முன் வந்தாலும் எந்த அரசியல் கட்சியும் பாக்காம நான் கண்டிப்பா அவங்களுக்கு சப்பொர்ட் பண்ணுவேன்
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சமையல் செய்வது உண்டா? நடிகைகள் பெரும்பாலும் சமையலில் வீக் என்பார்களே?
அப்படியெல்லாம் நான் சொல்ல முடியாது. படப்பிடிப்பு தளங்களில் நானும் தேவயானியும் சமைத்து இருக்கிறோம். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் என் அம்மாவுக்கு காய்கறி நறுக்கி கொடுத்து உள்ளேன். கொஞ்சம் தப்பு தப்பா சமைத்தாலும் மேனேஜ் பண்ணிடுவேன்.. என் அப்பா அம்மா இரண்டு பேருமே நல்லா சமைப்பாங்க.

திருமணத்துக்கு பிறகும் அவங்க கிட்ட போன்ல நிறைய கேட்டு சமைப்பேன். என் பசங்களுக்கு நான் சமைக்கிறது விட பரிமாறும் விதம் ரொம்ப பிடிக்கும். எளிய உணவை கூட அழகா பறிமாறுவேன்.
ஜோதிகா லைலா தேவயானி எல்லார் கூடயும் சேர்ந்து நடிச்சீங்க. அந்த மாதிரி இப்போ ஒரு வாய்ப்பு கிடைச்சா நடிப்பீங்களா?
சந்தோஷமா நடிப்பேன்.. 3 ரோசஸ், நினைத்தேன் வந்தாய் படங்கள் எல்லாம் என்னால் எப்போதும் மறக்க முடியாத படங்கள். படப்பிடிப்பில் இரண்டு ரூம் ரெண்டு பேருக்கு கொடுத்தாலும் தேவயானி, நாங்க ரெண்டு பேரும் சகோதரிகள் போல சேர்ந்தே தான் ஒரே ரூமில் இருந்தோம். திரும்ப எல்லாரும் சேர்ந்து நடிக்கக்கூடிய கதை வாய்ப்பு வந்தா கண்டிப்பா நான் நடிப்பேன்.
கவுண்டமணி சாருக்கு நீங்க ரசிகையா?
எங்க ரெண்டு பேரோட காம்பினேஷன் செமயா இருக்கும். அதுவும் சுந்தர் சி படங்களில் சொல்லவே வேணாம். சூப்பர் ஹிட் படங்கள். செட்ல செமையா பேசுவார். ஸ்டார்ட் கேமரா சொன்னதும் அப்படி ஒரு பர்பாம் பண்ணுவார்.
உங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே உங்க அண்ணனும் உங்க அம்மாவும் திரைத்துறையில் வந்ததுக்கு மிகப்பெரிய உதவியா இருந்திருக்காங்களே திருமணத்திற்கு பிறகு எப்படி மிஸ் பண்ணீங்க?
கனடா நான் வந்த புதுசுல ஒரு நாளைக்கு அவங்க கிட்ட இருந்து பத்து போன் வரும். இங்கு இரவு பகல் அந்த நேரம் அவங்களுக்கு தெரியாது. இப்பவும் எனக்கு நினைவு இருக்கு, ஒரு நாள் நடு இரவில் அவங்களுக்கு போன் பண்ணி உருளைக்கிழங்கு சமைக்கும் போது உப்பு போடுறதுக்கு பதிலா நான் சர்க்கரை போட்டுட்டேன். அதை எப்படி சரி பண்றதுன்னு கேட்டு போன் பண்ணேன். அப்படியே எடுத்து குப்பைல போடுன்னு சொன்னாங்க... இப்போ வரை என் குடும்பத்தினர் சப்போர்ட் எனக்கு இருக்கு.
நீங்க பிஸியா நடிக்கும் காலத்துல பார்ட்டி எல்லாம் போனதுண்டா? ட்ரிங்க்ஸ் சாப்பிட்ட பழக்கம் இருக்கா?
பார்ட்டி எல்லாம் ரொம்ப முக்கியமா இருந்தா போவேன். ஆனா எனக்கு ட்ரிங்க்ஸ் பழக்கம் இல்ல. ஸ்மோக் பண்ண மாட்டேன். அந்த டைம்ல பார்ட்டி இருக்கும் நமக்கு புடிச்சா போகலாம் புடிக்கலைன்னா போக தேவையில்ல. ஆனா இப்ப பெரும்பாலான சந்திப்பே அந்த பார்ட்டில தான் நடக்குது. ட்ரெண்ட் வேற மாதிரி இருக்கு..

நாங்க ஒவ்வொரு பிரண்ட்ஸ்ம் மாறி மாறி அவங்கவங்க வீட்டுல தான் மீட் பண்ணிப்போம். மீனா, தேவயானி, ஶ்ரீதேவி விஜயகுமார், என் வீட்டுக்கு என் பிரண்ட்ஸ் வராங்கன்னா எங்க வீட்டுல விதவிதமான சமையல் இருக்கும்.. எங்களுக்கு பிடித்தது இருக்கும். சாப்பிட்டு ஜாலியா ஷாப்பிங் போவோம், ஏன் படங்களுக்கு கூட சேர்ந்து போவோம். அதுக்குன்னு வெளிநாடு வெளி ஊர் எல்லாம் போகல.
உங்க கணவர் தொழிலுக்கு நீங்கள் உதவியாக இருப்பீர்களா?
அவர் பிசினஸ் எனக்கு தெரியாது. எங்க சினிமா வேலை அவருக்கு தெரியாது. சோ, நான் வீட்ட பார்த்துக்குவேன், குழந்தைங்க பள்ளிக்கு அனுப்புறது அவங்களோட தேவைகள் என்ன, வீட்டுக்கு என்னென்ன வேணும், இது எல்லாமே நான் பாத்துக்குவேன்.. அவர் நிறைய டிராவல் பண்ணுவார்.. அவருக்கு வீட்டு டென்ஷன் எதுவும் கொண்டு போக மாட்டேன்.. குழந்தைகள் தேவையான எதுவும் நான் மிஸ் பண்ண கூடாது; நான் பார்த்துக் கொள்வேன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வெற்றிமாறன் படத்தில நடிக்க ஆசை: நடிகை திவ்யா கணேஷ்வெற்றிமாறன் படத்தில நடிக்க ஆசை: ... ரூ.5 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய பூஜா ஹெக்டே! ரூ.5 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in