கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் அதையடுத்து வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பெற்றெடுத்தார்கள். அந்த குழந்தைகளுக்கு உயிர், உலகம் என்று பெயர் வைத்துள்ளார்கள். அதோடு தங்களது குழந்தைகளுடன் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன்.
தற்போது தனது மகன் உயிரை தனது மடியில் படுத்து தூங்க வைக்கும் நயன்தாரா, அவனது காலை மென்மையாக அமுக்கி விடுகிறார். விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.