''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சென்னை : விஜய் நடித்துள்ள ‛லியோ' படம் திரைக்கு வந்துள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அதேசமயம் ஒரு ரசிகர் படத்திற்கு டிக்கெட் பெற சுவர் ஏறி குதித்து காலை உடைத்துக் கொண்டார். மற்றொரு ரசிகர் தனது வருங்கால மனைவியை கரம்பிடிக்க தியேட்டருக்கு உள்ளேயே நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‛லியோ'. திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் அக்., 19ம் தேதி இன்று உலகம் முழுக்க வெளியானது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பன்மொழிகளிலும் ரிலீஸாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் 850 தியேட்டர்களில் ரிலீஸாகி உள்ளது.
9 மணிக்கு துவங்கிய காட்சி
தமிழகத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லாததால் காலை 9மணிக்கு தான் துவங்கியது. அதேசமயம் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இந்த படம் அதிகாலை காட்சியே திரையிடப்பட்டது. நம்மூர் ரசிகர்கள் அங்கு அதிகளவில் சென்று படம் பார்த்துள்ளனர்.
லியோ சர்ச்சை
‛லியோ' படம் பல்வேறு சர்ச்சைகளை கடந்து ஒருவழியாக இன்று வெளியானது. படத்தின் போஸ்டர் வெளியானது முதல் அதில் இடம் பெற்ற புகைபிடிக்கும் காட்சி தொடங்கி, ‛நா ரெடி' படத்தில் இடம் பெற்றுள்ள புகைபிடித்தல், குடிகாட்சி, அதன்பின் டிரைலரில் இடம் பெற்ற விஜய் பேசிய கெட்டவார்த்தை என தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கின. அதோடு படத்திற்கு அதிகாலை காட்சி கேட்டு தயாரிப்பு தரப்பு அடம்பிடித்து நீதிமன்றம் நாடியது, கோர்ட் அதற்கு அனுமதி மறுத்தது. தயாரிப்பாளர்கள், தியேட்டர்கள் இடையே பங்கு பிரிப்பதில் பிரச்னை என நேற்று மாலை வரை படத்திற்கான பிரச்னைகளும், அதை வைத்தே படத்திற்கு அதிகளவில் விளம்பரங்களும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்தாண்டு துவக்கத்தில் விஜய்யின் வாரிசு படம் வெளியானது. இப்போது லியோ படம் வெளியாகி உள்ளது. ஒரே ஆண்டில் விஜய்யின் இரண்டு படங்கள் வெளியாகி உள்ளது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. மாஸ்டர் படத்திற்கு பின் மீண்டு விஜய் - லோகேஷ் கூட்டணி இணைந்ததால் ஆரம்பம் முதலே படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. தமிழகத்தை பொருத்தமட்டில் காலை 9மணிக்கு தான் படம் வெளியானது. இருப்பினும் அவரது ரசிகர்கள் காலை முதலே கொண்டாட்டங்களில் ஆர்ப்பரித்தனர். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள தியேட்டர்களில் விஜய்க்கு விதவிதமான பேனர்கள், கட்-அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன. மேளதாளங்கள் முழங்க ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். சில ஊர்களில் ஆள் உயர கட்-கவுட்டிற்கு மாலை, பால் ஆபிஷேகம் போன்ற கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
ரசிகர்களுடன் படம் பார்த்த லோகேஷ்
லியோ படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுடன் சென்னையில் உள்ள வெற்றி தியேட்டரில் படம் பார்த்தார். அவருடன் அனிருத், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும், படக்குழுவினரும் சென்று படத்தை ரசித்தனர்.
ரசிகருக்கு கால் முறிவு
கிருஷ்ணகிரியில் லியோ படம் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காததால் தியேட்டரின் பின்பக்க சுவர் ஏறிக்குதித்த ரசிகர் அன்பரசு என்பவருக்கு கால் முறிந்தது. அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தியேட்டரில் நிச்சயதார்த்தம்
புதுக்கோட்டையில் லியோ படத்தின் முதல் காட்சி வெளியானபோது தியேட்டரில் விஜய் ரசிகர் வெங்கடேஷ் - மஞ்சுளா ஜோடி திருமணம் நிச்சயம் செய்து கொண்டனர்.