பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' | சென்னையில் நடந்த 80ஸ் நடிகர், நடிகைகள் ரீ யூனியன் | அரச கட்டளை, தளபதி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் - ஞாயிறு திரைப்படங்கள் |
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே கடந்த 20 வருடங்களாக கவனம் செலுத்தி நடித்து வந்தார். இந்த நிலையில் முதன்முறையாக மலையாளத்தில் நுழைந்துள்ள தமன்னா, நடிகர் திலீப் நடித்து வரும் 'பந்தரா' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு திலீப் வழக்குகளில் சிக்கி, சினிமாவில் இனிமேல் அவர் அவ்வளவுதான் என்கிற சூழல் நிலவியபோது அவருக்கு ராம்லீலா என்கிற ஹிட் படத்தை கொடுத்து நூறு கோடி வசூல் கிளப்பில் முதல் முறையாக அவரை இணைத்த இயக்குனர் அருண் கோபி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த ராம்லீலா கூட்டணிக்கான எதிர்பார்ப்புடன், காவாலா பாடல் மூலம் கடந்த சில மாதங்களில் கேரளாவிலும் மிகப்பெரிய அதிர்வுகளை உருவாக்கிய தமன்னாவும் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பதால் அந்த எதிர்பார்ப்பு இன்னும் இரு மடங்காகி உள்ளது. வரும் நவம்பர் 10ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக இருக்கிறது. தமன்னாவின் முதல் மலையாள படமே அவருக்கு வெற்றியை தரும் என எதிர்பார்க்கலாம்.