2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேஷன் நிறுவனம் கடந்த 4 வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. நேற்று நடந்த இந்த அமைப்பின் நிகழ்ச்சியில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், சனம் ஷெட்டி, ஜெர்மனி அரசு ஆலோசகர் மைக்கேலா குச்லர், காவல் உதவி ஆணையர் நெல்சன், துணை ஆட்சியர் ப்ரீத்தி பார்கவி, நடிகர் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது: இன்றைய சமூகத்தில் நமக்கு 35 ரூபாய் என்பது வெகு சாதாரணமான பணம் அது 35 ஆயிரம் கோடியாக தேவைப்படுபவர்களுக்கு சென்று சேர்வது ஆச்சர்யம், ஆனால் அந்த ஆச்சர்யம் நிகழ வேண்டுமெனில் அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், 100, 200 ரூபாய் கூட இல்லை வெறும் 35 ரூபாய் தான் நாம் கொடுக்கப்போகிறோம். இந்த நல்ல விசயம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதால்தான் இதில் கலந்துகொள்ள சம்மதித்தேன்.
இன்று மொய் விருந்து நடைபெறுகிறது. மிக எளிமையானவர்களுக்கு தேடிச்சென்று உணவளிக்கும் இந்த சமூகச்செயல்பாட்டை அனைவரும் பாராட்ட வேண்டும், எல்லோருக்கும் உணவளிக்கும் இந்த மிகப்பெரிய செயல்பாட்டில் நாம் அனைவரும் நம்மால் முடிந்த ஆதரவைத் தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.