பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

கடந்த 2018ம் ஆண்டில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், ஜஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர், டேனியல் பாலாஜி ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'வட சென்னை'. இந்த படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. வட சென்னை இரண்டாம் பாகம் வரும் என அறிவித்து ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து தான் வருகிறது.
இதற்கு சான்றாக வட சென்னை படம் வெளியாகி ஐந்து வருடங்கள் நிறைவு பெற உள்ளதால் இன்று அக்டோபர் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் வட சென்னை படத்தை ரீ ரிலீஸ் செய்கின்றனர். முதலில் மூன்று காட்சிக்கு தொடங்கிய இதன் முன்பதிவு ரசிகர்களின் பெரும் ஆதரவால் இப்போது முப்பதுக்கும் மேற்பட்ட காட்சிகளை திரையிடுகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட 8000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன் பதிவில் விற்பனை ஆகியுள்ளது என திரையரங்கு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.