பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் |

ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜப்பான்'. அனு இம்மானுவேல், சுனில், விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த வருட தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியாகிறது.
ஒருபுறம் இதன் பேட்ச் ஓர்க் பணிகள் நடைபெற்று வருகின்றன. மறுபுறம் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டீசரை வருகின்ற அக்டோபர் 18ம் தேதி அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பின் ஒரு காரணமும் உள்ளது . அக்டோபர் 19ம் தேதி அன்று வெளியாகும் லியோ படத்தின் இடைவேளை நேரத்தில் ஜப்பான் டீசரை திரையரங்குகளில் திரையிட உள்ளதாக கூறப்படுகிறது .