செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் தில்ராஜு. இவர்தான் கடந்தாண்டு விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்தார். படங்கள் தயாரிப்பது மட்டுமின்றி பல படங்களை வாங்கி விநியோகம் செய்வதிலும் தில் ராஜூ தீவிரம் காட்டி வருகிறார். அதனால் அவரது கட்டுப்பாட்டில் ஆந்திராவில் நிறைய தியேட்டர்கள் உள்ளன.
இந்த நிலையில் தற்போது ஆந்திராவில் விஜய்யின் லியோ வெளியாவதற்கு தில்ராஜ் முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறுகிறார்கள். இதற்கு காரணம், விஜய் நடிப்பில் தில் ராஜு தயாரித்த வாரிசு படத்தை தமிழகத்தில், தற்போது லியோ படத்தை தயாரித்துள்ள லலித்குமாரின் 7 ஸ்கிரீன் நிறுவனம்தான் வெளியிட்டது. அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் மோதல் ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாகவே தற்போது லலித் குமார் தயாரித்துள்ள லியோ படத்தை தெலுங்கில் வெளியிடுவதற்கு எதிராக தில்ராஜு போர்க்கொடி பிடித்திருப்பதாக கூறுகிறார்கள். அதோடு தனது வசமுள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை கொடுக்க அவர் மறுப்பதாகவும் தெரிகிறது.
இன்னும் லியோ படம் திரைக்கு வருவதற்கு ஒரு வார காலமே உள்ள நிலையில், இந்த விவகாரத்தினால் ஆந்திராவில் லியோ படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தற்போது தில்ராஜுவை சந்தித்து 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பாளர் லலித் குமார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.