ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள படம் 'லியோ'.
அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தின் வியாபாரம் பற்றிய தகவலை கோலிவுட் வட்டாரங்களில் கேட்டோம். இதுவரையில் தமிழ் சினிமா வரலாற்றில் வேறு எந்த ஒரு படத்திற்கும் நடக்காத வியாபாரம் இந்தப் படத்திற்கு நடந்துள்ளதாக ஆச்சரியத்துடன் தெரிவிக்கிறார்கள்.
இப்படத்தின் தமிழக உரிமை மட்டும் 100 கோடிக்கும் அதிகமாக விற்கப்பட்டுள்ளதாம். வெளிநாட்டு உரிமை 60 கோடி, தெலுங்கு மாநில உரிமை 20 கோடி, கர்நாடகா உரிமை 15 கோடி, கேரளா உரிமை 13 கோடி என தியேட்டர்களுக்கான ஏரியா உரிமை மட்டுமே 208 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.
படத்தின் சாட்டிலைட் டிவி உரிமை 75 கோடி, ஓடிடி உரிமை 125 கோடி என அதில் மொத்தமாக 200 கோடி வருவாய் வந்துவிட்டதாம். படத்தின் பட்ஜெட்டை இந்த ஒன்றிலேயே எடுத்துவிட்டார்கள் என்கிறார்கள். ஆடியோ உரிமை மூலம் மட்டுமே 15 கோடி ஆரம்பத்திலேயே வந்துவிட்டதாம். ஒட்டு மொத்தமாக 423 கோடி வரையில் 'லியோ' படத்திற்கான வியாபாரம் நடந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
டிரைலருக்கு கிடைத்து வரும் வரவேற்பில் படக்குழுவினர் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்களாம். 500 கோடி வசூல் உறுதி என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் வசூலான 600 கோடி வசூலைக் கடந்து சாதனை படைக்குமா, அதற்கடுத்து 1000 கோடி வரை வசூலித்து புதிய சாதனை படைக்குமா என ரசிகர்களும், திரையுலகத்திலும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.




