ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) |

இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். 800 விக்கெட்டுகள் வீழ்த்தி உலக சாதனை படைத்திருப்பதால் 800 என்கிற பெயரிலேயே அவரது வரலாறு சினிமாவாகியுள்ளது. அவரது வேடத்தில் பாலிவுட் நடிகர் மதுர் மிட்டல் நடித்துள்ளார். அவரது மனைவியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். ஸ்ரீபதி இயக்கி உள்ளார். நேற்று படம் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் முரளிதரன் படம் பற்றி கூறியிருப்பதாவது: இது எனது வாழ்க்கையின் உணர்ச்சிகரமான கட்டம். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனது வாழ்க்கைக் கதையைச் சொல்வதை விட, இளைய தலைமுறையினருக்கு முன்னால் இருக்கும் சவால்கள் மற்றும் போராட்டங்களை வெளிக்கொணரும் வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது, இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை படக்குழுவினர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இத்தனை தடைகளையும் மீறி படக்குழுவினர் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்த படத்தில் என் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த மதுர் மிட்டலுக்கு நன்றி. '800' திரைப்படம் உங்களுக்கு இனிமையான, ஊக்கமளிக்கும் அனுபவத்தைத் தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.