எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
விஷ்ணு விஷால், அமலாபால், சரவணன் நடித்த ராட்சசன் படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் 2ம் பாகத்தின் பணிகள் தொடங்கி விட்டது என்று படத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
'ராட்சசன்' படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகிறது. இயக்குநர் ராம்குமார் இந்தப் படத்திற்கான கதையை சொல்ல ஆரம்பித்ததில் இருந்து படத்தின் திரையரங்கு வெளியீடு வரை இந்தப் படம் மீது நாங்கள் அனைவரும் வைத்த நம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவையே இந்த வெற்றிக்குக் காரணம் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
ஒரு தயாரிப்பாளராக, 'ராட்சசன்' எங்கள் எல்லோருக்கும் 'கேம் சேஞ்சர்' படமாக அமையும் என்ற வலுவான நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால், எங்களின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி பத்திரிகை ஊடக நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்தப் படத்திற்குக் கொடுத்த வரவேற்பு எங்களை ஆச்சரியப்படுத்தியது.
படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆனாலும், திரையரங்குகளில் 'ராட்சசன்' படத்திற்குக்கு கிடைத்த கைதட்டல் மற்றும் பாராட்டுகள் இப்போதும் உற்சாகப்படுத்துகிறது. இதுமட்டுமல்லாது, நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்ற பெரும் நம்பிக்கையை ஆக்செஸ் பிலிம் பேக்டரிக்கு தரும் விதமாகவும் இந்தப் படம் அமைந்தது.
ராட்சசன் படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆவதை ஒட்டி ஆக்சஸ் பிலிம் பேக்டரி 'ராட்சசன் 2' படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை அறிவிக்கிறது. மேலும், இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதிர்பார்த்ததை விட விரைவில் வெளியாகும் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.