ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'அயலான்' படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.
2024 பொங்கலுக்குத் திரைக்கு வர உள்ள இப்படத்தின் டீசரில் இடம் பெற்றுள்ள விஎப்எக்ஸ் காட்சிகள் அசத்தலாக அமைந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. வேற்று கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் ஒரு உயிரினம், அதைச் சுற்றி நடக்கும் விஷயங்கள்தான் படத்தின் கதை என்பது டீசரைப் பார்த்ததும் புரிகிறது.
சிவகார்த்திகேயன் படங்களில் இருக்கும் நகைச்சுவையும் இந்த சயின்ஸ் பிக்ஷன் படத்தில் சேர்த்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஹாலிவுட் தரத்தில் டீசர் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
டீசரின் எடிட்டிங்கும், அதற்கான பின்னணி இசையும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. டிரைலர் வெளியிடும் போது அதைச் சரி செய்வார்கள் என நம்புவோம்.