நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் இந்த மாதம் 19 ஆம் தேதி திரைக்கு உள்ளது. இப்படத்தின் போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்ட படக்குழு இரண்டு பாடல்களையும் வெளியிட்டுள்ள நிலையில், நேற்று டிரைலரை வெளியிட்டார்கள். இந்த டிரைலரை சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் விஜய் ரசிகர்களுக்காக திரையிட்டார்கள். அப்போது ஒவ்வொரு ரசிகர்களிடத்திலும் டிக்கெட் வசூலித்துக் கொண்டு தியேட்டருக்குள் அனுப்பினார்கள். ஆனால் லியோ டிரைலரை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் அந்த தியேட்டருக்குள் நிற்கக்கூட இடம் இல்லாமல் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதோடு, அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகளின் மேலே நின்று டிரைலரை பார்த்த ரசிகர்கள், விஜய்யை திரையில் பார்த்ததும் உற்சாகத்தில் துள்ளி குதித்துள்ளார்கள். இதன் காரணமாக 200க்கும் மேற்பட்ட இருக்கைகள் உடைந்து சேதம் ஆகின. தியேட்டரை இப்படி நாசம் செய்ததை ஏதோ சாதித்தது போன்று சில ரசிகர்கள் வெளியில் பேட்டி கொடுத்து சென்றது தான் கொடுமையான விஷயம்.