ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் | மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதா ? நடிகர் ஜெயசூர்யா மறுப்பு | பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? |

ஜோக்கர், ஆண் தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். அதோடு, பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றார். சோசியல் மீடியாவில் அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் ரம்யா பாண்டியன், சமீபகாலமாக ஆன்மிக தலங்களுக்கு செல்லும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இமயமலை அருகே உள்ள ரிஷிகேஷிற்கு தான் சென்றிருந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தவர், தற்போது பஞ்சாப் பொற்கோயிலுக்கு சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதோடு, பொற்கோவிலின் தெய்வீக ஒளியில் மூழ்கி விட்டேன். ஒவ்வொரு அடியிலும் தங்கத்திலான ஆசீர்வாதமான உணர்வு கிடைத்தது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.