என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் | 'விஸ்வரூபம்' படத்தின் கதையை சொல்ல முடியாமல் போனது வருத்தம்! - செல்வராகவன் | மறைந்த ஆஷா போஸ்லேவின் பிறப்பும் திரை வாழ்க்கையும் | பிரபல திரைப்பட பாடகி ஆஷா போஸ்லே காலமானார் | 'ஜனநாயகன்' லீக், சைபர் கிரைம் விசாரணை ஆரம்பம் | பிஸியான நடிகையாக கயாடு லோஹர் | 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சிகிரி சிகிரி' பாடல் |

ஓரே ஆண்டில் ஷாரூக்கான் நடித்த பதான், ஜவான் ஆகிய இரண்டு படங்களும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்தன. இதன் காரணமாக, ஷாரூக்கான் நடித்து வருகிற கிறிஸ்மஸ் தினத்தில் திரைக்கு வர இருக்கும் டங்கி என்ற படத்திற்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதே கிறிஸ்துமஸ் தினத்தில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் படமும் திரைக்கு வர உள்ளது. இப்படமும் பான் இந்தியா படமாக பல மொழிகளிலும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. அதன் காரணமாக ஷாரூக்கானின் டங்கி மற்றும் பிரபாஸின் சலார் என்ற இரண்டு படங்களுக்குமிடையே பலத்த போட்டி நடக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இதற்கு முன்பு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎப் படத்துடன் மோதிய ஷாரூக்கானின் ஜீரோ படம் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.