ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
ஸ்ரீஆண்டாள் மூவீஸ் சார்பில் வீர அமிர்தராஜ் தயாரிக்கும் படம் 'முனியாண்டியின் புலிப்பாய்ச்சல்'. தமிழக கிராமத்து தெய்வங்களில் முக்கியமான தெய்வமான முனியாண்டி சாமியின் பக்தனாக, முனியாண்டி கோயிலில் குறி சொல்லுபவராக கதையின் நாயகனாக ஜெயகாந்த் நடிக்கிறார். சாரா ராஜ் கதையின் நாயகியாக நடிக்கிறார். வில்லனாக சண்டைப்பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார். சிங்கம்புலி, முத்துக்காளை முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சவுந்தர்யன் இசை அமைக்கிறார், ராம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
ராஜா முகமது இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, “காந்தாரா படம் போன்று இதுவும் கிராமத்து தெய்வத்தின் சக்தியை கூறும் படமாக தயாராகிறது. முனி வேஷம் கட்டி ஆடும் ஒரு கலைஞன் சாமி அருள் வந்து நிற்கும்போது சமூகத்தில் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்பது மாதிரியான கதை” என்றார்.