ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது | ரஜினி, கமல் பட அறிவிப்பு நாளை வெளியாகிறது | ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம் அறிவிப்பு | ஒல்லியான நடிகைகள் காணாமல் போய்விட்டார்கள் : உருவகேலியால் இனியா ஆவேசம் | பிளாஷ்பேக் : நடிகராக படம் தயாரித்த சரத்குமார் | பிளாஷ்பேக் : காந்தி பாராட்டிய நடிகர் | 'கேரள ஸ்டோரி 2' படத்திற்கு கோர்ட் நோட்டீஸ் | 2026ன் 3வது நேரடி ஓடிடி ரிலீஸ் 'லக்கி தி சூப்பர்ஸ்டார்' | ஷங்கரின் ‛வேள்பாரி' படத்தில் தனுஷ் நடிக்கிறாரா...? |

அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் 'அனிமல்'. ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி சீரியஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். டிசம்பர் 1ம் தேதி அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
இந்த படத்தின் டீசர் வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி காலை 10 மணி அளவில் வெளியாகும் என அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது இப் படத்திலிருந்து அனில் கபூர் தோற்றத்தை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.