காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு லியோ மற்றும் தி ரோடு படங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. மலையாளத்தில் ராம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதோடு அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் திரிஷா தான் நாயகி என்றும் கூறப்படுகிறது.
இந்த நேரத்தில் மலையாள தயாரிப்பாளர் ஒருவரை த்ரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியானது. மலையாள படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது அந்த தயாரிப்பாளரை சந்தித்த திரிஷாவுக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும், விரைவில் திருமணம் ஆக இருப்பதாக செய்திகள் பரவின.
இந்நிலையில் இதை மறுத்துள்ளார் த்ரிஷா. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'நீங்கள் யார் உங்கள் குழு எது என்று தெரியும். அமைதியாக இருங்கள், வதந்திகளை நிறுத்துங்கள்''என லியோ படத்தின் போஸ்டரில் இடம் பெற்றுள்ள வசனத்தைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் த்ரிஷா.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள லியோ படம் அக்., 19ல் ரிலீஸாக உள்ளது. நேற்று வெளியிடப்பட்ட இதன் போஸ்டரில், ‛‛அமைதியாக இருங்கள், போருக்கு தயாராகுங்கள்'' என குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த ஸ்டைலில் இப்போது பதிலடி கொடுத்துள்ளார் த்ரிஷா.