கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா | தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' | பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா | பிளாஷ்பேக்: குழந்தை நட்சத்திரமாக நடித்த பத்மா சுப்பிரமணியம் |
மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் துவங்கப்பட்ட படம் பிரமயுகம். இந்த படத்தை ராகுல் சகாதேவன் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் மம்முட்டியின் கதாபாத்திர தோற்றம் குறித்து சமீபத்தில் வெளியான பர்ஸ்ட் லுக்கை பார்த்த அனைவரும் இது மம்முட்டி தானா என ஆச்சரியப்பட்டனர். அந்த அளவிற்கு வயதான வித்தியாசமான தோற்றத்தில் அவர் உள்ளார். இதில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள இயக்குனரான சித்தார்த் பரதன் நடித்து வருகிறார். இவர் தமிழில் தேவர் மகன், ஆவாரம்பூ ஆகிய படங்களை இயக்கிய மறைந்த இயக்குனர் பரதன் மற்றும் காதலுக்கு மரியாதை புகழ் குணச்சித்திர நடிகையும் கேபிஏசி லலிதா ஆகியோரின் மகன் ஆவார்.
டைரக்ஷனை தாண்டி தற்போது நடிப்பிலும் அடி எடுத்து வைத்துள்ள இவர் மம்முட்டியுடன் நடித்த அனுபவம் குறித்து தற்போது தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறுகையில், “மம்முட்டியுடன் நடிக்கப் போகிறோம் என்றபோது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தது. அதேசமயம் படப்பிடிப்பில் அவரது நடிப்பு அனுபவத்திற்கு ஈடு கொடுத்து நடிப்பது சவாலாகவும் இருந்தது. இருந்தாலும் நடிப்பில் பல நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்த மம்முட்டி, எதிரில் நிற்பவர் டென்ஷன் இல்லாமல் நடிப்பதற்கும் வழிகாட்டியதால் ஓரளவு சமாளித்து நடித்து விட்டேன். அவருடன் நடித்த தருணங்கள் வாழ்க்கையில் என்றும் மனதில் வைத்து போற்றிப் பாதுகாக்க வேண்டியவை” என்று தனது சிலாகிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.