கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
பல்லடம் : ''ஐம்பது வயது கடந்த ஆண்களுக்கு மனைவியே இரண்டாம் தாய்,'' என, பல்லடத்தில் நடிகர் சிவகுமார் கருத்து தெரிவித்தார்.
பல்லடம் வனம் அமைப்பின் வனாலயம் அடிகளார் அரங்கில், நடிகர் சிவகுமாரின் 'குரல் 100 - திருக்குறள் உரை' நிகழ்ச்சி நேற்று நடந்தது. வனம் அமைப்பின் தலைவர் சுவாதி சின்னசாமி தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார். செயல் தலைவர் பாலசுப்ரமணியம், பியோ தலைவர் சக்திவேல் மற்றும் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
நடிகர் சிவகுமார் பேசியதாவது : கொங்கு தமிழ் பாரம்பரியத்தை நான் விட்டு சென்று 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால், ஒருபோதும் என்னால் இவற்றை மறக்க முடியாது. ஏனெனில், இவையெல்லாம் எனது ரத்தத்தில் ஊறியவை. விநாயகர், முருகன், சிவன் என கடவுள்களை நாம் தான் உருவகப்படுத்தி உள்ளோம். படைப்பு கடவுளாக இருப்பவர்கள் தான் பெண்கள். ஏனெனில், இந்த உடலில் உள்ள கண், காது, மூக்கு, வாய் உள்ளிட்ட அனைத்தையும் கொடுத்தவர்கள் தாயாக விளங்கும் பெண்கள் தான்.
உலகில், கணவனை இழந்து தனியாக வாழும் பெண்களை பார்க்கலாம். ஆனால், மனைவியை இழந்த, 50 ஆண்டு வாழ்பவர்கள் யாரும் இருக்க முடியாது. ஐம்பது வயது கடந்த அனைத்து ஆண்களுக்கும், அவரவர் மனைவி தான் இரண்டாம் தாய். எனது உயிர் போக வேண்டும் என்று நான் ஆசைப்பட்டால் அது எனது மனைவியின் மடியில் தான் போக வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட தாயை வணங்குங்கள். நான் எனது மனைவியை அப்படித்தான் வணங்கி வருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.