ஓடிடி டிரெண்டிங்கில் 'பகவந்த் கேசரி' | பொங்கல் போட்டி : டிரைலர்களில் முந்தும் 'ஜனநாயகன்' | எனக்கு யாரும் முழு சம்பளம் தந்ததில்லை: ரச்சிதா மகாலட்சுமி பேச்சு | 'திரெளபதி 2' பாடலில் சின்மயி குரல் நீக்கம்: இயக்குனர் பேட்டி | டிரைலரிலும் போட்டி போடும் 'பராசக்தி' | பிளாஷ்பேக்: தமிழ் படத்தில் நடித்த பிரேம் நசீர் மகன் | பிளாஷ்பேக்: நெகட்டிவ் ஹீரோவாக நடித்த சிவாஜி | ‛லொள்ளுசபா' வெங்கட்ராஜ் காலமானார்: நாளை வேளச்சேரியில் இறுதிசடங்கு | ‛என் தாய்மொழியை காக்க, பெரும் சேனை ஒன்று உண்டு': வெளியானது பராசக்தி டிரைலர் | அஜித் குமாரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட 4 இயக்குனர்கள்! |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், ரிது வர்மா, எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. நேற்று இத்திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் மூலம் இரும்புத்திரை படத்திற்கு பிறகு விஷாலும், த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் கம்பேக் கொடுத்ததாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 500 ஸ்கிரீன்-களில் நேற்று தமிழ்நாட்டில் வெளியான இந்த படம் முதல் நாள் மட்டும் ரூ.7.9 கோடி வசூலித்தாக கூறப்படுகிறது. மேலும், இதுதான் விஷால் நடித்த படங்களிலே முதல் நாள் அதிக வசூலித்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 2023ம் ஆண்டில் வெளிவந்த படங்களில் முதல் நாள் வசூலில் 7வது இடத்தை இந்த படம் பிடித்துள்ளது என்கிறார்கள். குறிப்பாக முதல் நாள் உலகளவில் ரூ.12 கோடி வசூலை எட்டியதாக கூறப்படுகிறது.




