அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, பிரித்வி, திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, அருண் பாலாஜி, மற்றும் பலர் நடிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட கதை களத்துடன் உருவாகியிருக்கும் படம் புளூ ஸ்டார். ஜெய்குமார் இந்த படத்தினை இயக்கியிருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் நடித்திருந்த அசோக் செல்வனும் , கீர்த்தி பாண்டியனும் இன்று(செப்., 13) திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்காக அவர்கள் நடிப்பில் உருவான புளூ ஸ்டார் படத்தில் இருந்து "ரயிலின் ஒலிகள்" என்கிற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர். உமா தேவி எழுதிய இந்த பாடலை பிரதீப் குமார், சக்திஸ்ரீ கோபாலன் ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர்.