சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த ஜெயிலர் படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தயாரிப்பு தரப்பு கார் பரிசாக அளித்தது. மேலும், படத்தில் பணியாற்றிவர்களுக்கு தங்க நாணயமும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மலேசியா பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி, அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.
இந்த சந்திப்பு குறித்து மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறுகையில், 'ஆசிய மற்றும் சர்வதேச கலை உலகில் புகழ்பெற்ற ரஜினியை இன்று சந்தித்தேன். களத்திலும், திரையுலகிலும் ரஜினிகாந்த் சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன்' என்றார்.




