வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛புஷ்பா'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது இதே கூட்டணியில் புஷ்பா 2 - தி ரூல் என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல்பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாய் இந்த படம் தயாராகி வருகிறது. 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி அடுத்தாண்டு ஆக., 15ல் இந்த படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர். முன்னதாக படத்தின் திரைக்கதை பணிகள் முடியாததால் படப்பிடிப்பு துவங்க தாமதமாகி வந்தது. அதனால் படத்தின் ரிலீஸ் தேதி இவ்வளவு தூரம் தள்ளிப் போய் உள்ளது. முதல்பாகத்தை போலவே தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பன் மொழிகளிலும் உருவாகிறது.