‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் 'லியோ'. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார், படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை இங்கிலாந்தில் வெளியிடும் உரிமத்தை அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. படம் வெளிவருவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. இதற்கு முன்பு இதே நிறுவனம் வெளியிட்ட 'வாரிசு' படம் ஒரே நாளில் 2 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதே சாதனை அளவாக இருந்தது. தற்போது அதனை 'லியோ' முறியடித்துள்ளது.
“லியோ படத்திற்கு முதல் நாளிலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலமான கூட்டணியால், இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரசிகர்கள் மிகப்பெரும் ஆதரவை தந்து வருகிறார்கள். இங்கிலாந்தில் இந்தியப் படமொன்றின் மிகப்பெரிய வெளியீடாக இப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்” என்று அஹிம்சா நிறுவனம் தெரிவித்துள்ளது.