பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த், வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் பலர் நடிக்க ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த படம் 'ஜெயிலர்'. இப்படம் 550 கோடி வசூலைக் கடந்து 600 கோடி வசூலை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இன்று (செப்.,3) இப்படத்தின் 25வது நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினி ரசிகர்கள் பலர் தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
வட இந்தியாவைத் தவிர தென்னிந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இப்படம் அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் 200 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் 7ம் தேதி இப்படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளனர். அதனால், அந்த சாதனை படைக்கப்படுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் மொத்தமாக 600 கோடி வசூலைக் கடந்துவிடும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.




