பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் |
அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு மற்றும் பலர் நடித்து செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ள ஹிந்திப் படம் 'ஜவான்'. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய ஒரு விழாவை சென்னையில் நடத்த ஆசைப்பட்டார் படத்தின் இயக்குனர் அட்லீ. அவருடைய ஆசையை பெரிய மனதுடன் நிறைவேற்றினார் படத்தின் தயாரிப்பாளருமான ஷாரூக்கான்.
ஆனால், நேற்று நடைபெற்ற விழாவில் சிலர் பேசும் போது யதேச்சையாக 'லியோ' எனக் குறிப்பிட்டுப் பேசினர். அப்போது அரங்கில் இருந்த ரசிகர்களின் ஆரவாரம் அடங்க நீண்ட நேரம் ஆனது. குறிப்பாக பிரியாமணி பேசும் போது ரசிகர்கள் அவர்களது ஆரவாரத்தை நிறுத்தவேயில்லை. அனிருத் பேசும் போதும் 'லியோ அப்டேட்' எனக் கத்தினார்கள். அடுத்து அதுதான் எனப் பேசிவிட்டுச் சென்றார் அனிருத்.
தனது 'ஜவான்' படத்திற்கான புரமோஷனுக்காக மும்பையில் இருந்து வந்த ஷாரூக்கான் 'லியோ' படத்திற்கு இப்படி ஒரு இலவச புரமோஷன் கிடைத்ததைப் பார்த்து கொஞ்சம் அமைதியாகவே இருந்தார். இப்படத்தில் விஜய்யும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்கிறார்கள்.
விழாவுக்கு வந்திருந்த கல்லூரி மாணவர்கள், மாணவிகள் ஆரம்பம் முதலே ஆர்ப்பரிப்புடன் இருக்க முதலில் பேச வந்த படத்தின் எடிட்டர் ரூபன் எதையெதையோ பேசி நீண்ட நேரம் இழுத்து பொறுமையை சோதித்து நிகழ்ச்சியின் வேகத்தைக் குறைத்துவிட்டார். படத்தையும் அப்படி இழுஇழுவென இழுத்திருக்க மாட்டார் என்று நம்புவோமாக.