ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
யூடியூப் தளத்தில் அதிக 100 மில்லியன் பாடல்களைப் பெற்றவர்களில் நடிகர் விஜய் தான் முன்னணியில் இருக்கிறார். அப்படி விஜய்யின் 11 பாடல்கள் 100 மில்லியன் கிளப்பில் உள்ளன. தற்போது விஜய் சாதனையை தனுஷ் சமன் செய்துவிட்டார். ‛வாத்தி' படத்தில் இடம் பெற்ற 'வா வாத்தி' பாடல் 100 மில்லியன் பார்வைகளைத் தற்போது கடந்துள்ளது. இப்பாடலுடன் தனுஷின் 100 மில்லியன் பாடல்கள் எண்ணிக்கை 11ஐத் தொடுகிறது.
அவர் நடித்து வெளிவந்த, 'மாரி 2 - ரவுடி பேபி' பாடல் 1400 மில்லியன்களைக் கடந்து யூடியூப் தளத்தில் முதலிடத்தில் உள்ள தமிழ் சினிமா பாடலாக உள்ளது. அதற்கடுத்து '3 - ஒய் திஸ் கொலவெறிடி' பாடல் 415 மில்லியன் பார்வைகளுடனும், 'மாரி - டானு டானு' பாடல் 220 மில்லியன்களுடனும், 'எனை நோக்கி பாயும் தோட்டா - மறு வார்த்தை பேசாதே' பாடல் 153 மில்லியன்களுடனும், 'திருச்சிற்றம்பலம் - தாய் கெழவி' பாடல் 145 மில்லியன்களுடனும், 'மாரி - தர லோக்கல்' பாடல் 130 மில்லியன்களுடனும், 'திருச்சிற்றம்பலம் - மேகம் கருக்காதா…' பாடல் 124 மில்லியன்களுடனும், 'வேலையில்லா பட்டதாரி - ஊதுங்கடா சங்கு' பாடல் 115 மில்லியன் பார்வைகளுடனும், 'பட்டாஸ் - சில் ப்ரோ' பாடல் 108 மில்லியன்களுடனும், 'ஜகமே தந்திரம் - புஜ்ஜி..' பாடல் 102 மில்லியன்களுடனும், தனுஷின் 100 மில்லியன் கிளப் பாடல்களாக உள்ளன.
தமிழ் சினிமாவில் இதுவரை 55 பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளன. அவற்றில் தலா 11 பாடல்களை தங்கள் வசம் வைத்துள்ளனர் விஜய், தனுஷ். இந்தப் பட்டியல் இத்துடன் நிற்காது, இன்னும் அதிகரிக்கலாம்.