சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் | 'ராமாயணா' படத்திற்கு புதிய சர்ச்சை | 2024ன் முதல் வசூல் படமாக 'அரண்மனை 4' | அஸ்வினியின் 'கங்கணம்' | பய்யா ஜி: மனோஜ் பாஜ்பாயின் 100வது படம் |
நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த், வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா மற்றும் பலர் நடிக்க ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த படம் 'ஜெயிலர்'. இப்படம் 525 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இப்படத்தைப் பொறுத்தவரையில் உலகம் முழுவதும் சுமார் 125 கோடிக்கு வியாபாரம் நடந்ததாக படம் வெளிவருவதற்கு முன்பே பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவித்தார்கள். தமிழக உரிமையாக 62 கோடி, தெலுங்கு உரிமையாக 12 கோடி, கர்நாடக உரிமையாக 10 கோடி, கேரளா உரிமையாக 6 கோடி, இதர மாநிலங்களில் 4 கோடி, வெளிநாடுகளில் 31 கோடி என மொத்தமாக 125 கோடிக்கு விற்பனையானது.
இப்போது 525 கோடி வரை வசூலித்துள்ளது. இந்த வசூலில் தமிழகத்தில் மட்டும் 150 கோடி, தெலுங்கில் 73 கோடி, கர்நாடகாவில் 63 கோடி, கேரளாவில் 49 கோடி, இதர மாநிலங்களில் 10 கோடி, வெளிநாடுகளில் 180 கோடி வசூலாகியிருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
இந்த வார இறுதி நாளான இன்றும், நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் படத்திற்கான முன்பதிவு சிறப்பாக உள்ளது என தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் வரையிலும் இந்தப் படத்திற்கான வரவேற்பு குறைய வாய்ப்பில்லை. எனவே, எப்படியும் 600 கோடி ரூபாய் வசூலைக் கடக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.