'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
'அப்டேட்' கேட்பதே அஜித் ரசிகர்களுக்குப் பெரும் வேலையாகப் போய்விட்டது. 'விடாமுயற்சி' படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆன பின்னும் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியாமலேயே இருந்தது.
அஜித்தும் பைக்கில் உலக டூர் என அடிக்கடி கிளம்பிவிடுவதால் படம் எப்போது ஆரம்பமாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களுக்கு நேற்று நடைபெற்ற 'சந்திரமுகி 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அப்டேட் கொடுத்துள்ளார்.
விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என நேற்று பேசும் போது அவர் தெரிவித்துள்ளார். 'விடாமுயற்சி' படம் தங்களுக்கு முக்கியமான படம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, கதைத் திருட்டு சிக்கல் என பட வெளியீட்டின் போது எதுவும் வந்துவிடாமல் இருக்க சில வெளிநாட்டுத் திரைப்படங்களின் உரிமையை வாங்கியுள்ளதாகவும் கோலிவுட்டில் சொல்கிறார்கள்.