மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் |
‛மாநகரம், கைதி, விக்ரம்' என தொடர் வெற்றி படங்களை தந்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யை வைத்து இயக்கி வரும் திரைப்படம் 'லியோ'. இதில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி அன்று வெளியாகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் அளித்த பேட்டி ஒன்றில் லியோ படத்தை குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, "இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விஜய்யின் சினிமா வாழ்க்கையில் லியோ படத்தில் தான் அவரது நடிப்பு உச்சமாக இருக்கும். குறிப்பாக இதன் இடைவேளைக்கு முந்தைய 8 நிமிட காட்சிகள் வேறலெவலில் இருக்கும்" என பகிர்ந்துள்ளார். இப்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.