'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சென்னை : இஸ்ரோ மற்றும் இந்திய விஞ்ஞானிகளை கிண்டல் செய்யும் வகையில் கேலிச்சித்திரம் வெளியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என, தமிழக நாடார் சங்கம் சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பில் சந்திரயான் 3 விண்கலம் இஸ்ரோ சார்பில் அனுப்பப்பட்டது. இதில் உள்ள விக்ரம் லேண்டர் நாளை(ஆக., 23) தரையிறங்க உள்ளது. இதை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்நிலையில் விக்ரம் லேண்டர் எடுத்த முதல்படம் என டீ ஆத்தும் புகைப்படம் ஒன்றை கிண்டலாக பதிவிட்டார் நடிகர் பிரகாஷ்ராஜ். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மழுப்பல்
இதற்கு பிரகாஷ்ராஜ், ‛‛உலகில் எந்த ஒரு மூலைக்கு சென்றாலும் அங்கு ஒரு மலையாளி டீக்கடை வைத்திருப்பார். அதை நினைவுப்படுத்தும் விதமாகத்தான், நிலவிலும் கூடிய சீக்கிரமே மலையாளி ஒருவர் டீக்கடை வைக்க போகிறார் என்பதை சொல்லும் வகையில் இதை நான் குறிப்பிட்டு இருந்தேன். நான் சொன்ன இந்த ஜோக் உங்களுக்கு புரியவில்லை என்றால் என்ன செய்ய முடியும். அது உங்கள் பிரச்சனை'' என்று மழுப்பலாக தெரிவித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
தேச துரோக வழக்கில் பிரகாஷ் ராஜை கைது செய்ய வேண்டும் என, தமிழக நாடார் சங்கம் சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நாடார் சங்க தலைவர் முத்துரமேசு அளித்த மனு : சினிமா நடிகர் பிரகாஷ்ராஜ், 20ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் கேலிச்சித்திர பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பிய படங்களை கிண்டல் செய்யும் வகையில், முன்னாள் இஸ்ரோ தலைவர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த கைலாச வடிவு சிவன், நிலாவில் டீ ஆற்றுவது போல கிண்டலடித்து கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளார்.
இந்த கேலிச்சித்திரம் விஞ்ஞானிகளை கேவலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளின் தியாகத்தை போற்றவில்லை என்றாலும் சாதனைகளை வாழ்த்தவில்லை என்றாலும் அவர்களது திறமையை கேலி கிண்டல் செய்வது தேச விரோதமாகும். எனவே பிரகாஷ்ராஜை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும். அவரது ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு ஆவணங்களை பயன்படுத்த தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.