பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் புரமோஷனை தொடங்க உள்ளார்கள். அதன் முதல்கட்டமாக லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெறும், மலேசியாவில் நடைபெறும் என்று இரண்டு விதமான செய்திகள் வெளியாகிவந்த நிலையில் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது அக்டோபர் 5ம் தேதி மலேசியாவில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக லியோ பட வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல் கசிந்துள்ளது. இதுவரை விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழா, தமிழகத்தில் அவரது ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில், முதல் முறையாக ஒரு வெளிநாட்டில் விஜய் படத்தின் இசை விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.