டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
மலையாள நடிகர் மம்முட்டியின் வாரிசு துல்கர் சல்மான். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து இந்திய அளவில் நடித்து அசத்தி வருகிறார். இவர் நடித்துள்ள ‛கிங் ஆப் கோதா' படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது. இந்த பட புரொமோஷனில் பேசிய துல்கர், ‛‛நான் தற்போது 40 வயதை நெருங்கி வருகிறேன். இனி அடுத்த 10 ஆண்டுகளில் ரொமான்ஸ் ஹீரோவாக நடிக்க முடியாது. அடுத்தக்கட்டத்திற்கு செல்ல நினைக்கிறேன். முதிர்ச்சியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். கிங் ஆப் கோதா படத்தில் ஆக் ஷன் வேடத்தில் நடித்துள்ளேன். இதில் நடிப்பது கடினமானது. அதை சுவாரஸ்யமாக உருவாக்கி உள்ளனர்'' என்றார்.
இவரது தந்தை உட்பட 60 வயதை கடந்த ஹீரோக்களே ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்து வரும் நிலையில் இவரோ அப்படி நடிக்க மாட்டேன் என கூறியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.