'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
தெலுங்கில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடித்து வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‛குஷி'. சமந்தா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் சிவா நிர்வானா இயக்கியுள்ளார். ஹேசம் அப்துல் வகாப் என்பவர் இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 1ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டாவிடம் துல்கர் சல்மான், விஜய்சேதுபதி போன்றவர்கள் வெப் சீரிஸிலும் நடிக்க துவங்கி விட்டார்கள். உங்களுக்கு வெப் சீரிஸில் ஆர்வம் இல்லையா? எப்போது உங்களை வெப் சீரிஸில் எதிர்பார்க்கலாம் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா எனக்கு வெப் சீரிஸ் நடிக்கும் எண்ணம் தற்போது இல்லை. தற்போதைக்கு திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.