2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான சூப்பர் ஹிட் படமான திரிஷ்யம் மூலம் முதன்முறையாக நடிகர் மோகன்லாலும், இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் கைகோர்த்தனர். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து திரிஷ்யம் 2, டுவல்த் மேன் மற்றும் ராம் என நான்கு படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். இதில் ராம் படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் பாதியிலேயே நிற்கிறது. மற்ற மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றன. இந்த நிலையில் ஐந்தாவதாக நேரு என்கிற படத்திற்காக இணைந்துள்ளனர் மோகன்லாலும், ஜீத்து ஜோசப்பும்.
மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் 33 வது படமாக இது உருவாக இருக்கிறது. நேரு அதாவது உண்மை என்கிற டைட்டிலுடன் நீதியை தேடி என்கிற டேக்லைனுடன் இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் மோகன்லால். மேலும் இந்த போஸ்டரை பார்க்கும்போது இது நீதிமன்றம் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடிகிறது.