முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு | நடிகை ரம்யா மீது அவதூறு தாக்குதல் : இதுவரை நடிகர் தர்ஷினின் 12 ரசிகர்கள் கைது | மலையாள திரையுலகை பிடித்து ஆட்டும் கேமியோ ஜுரம் | முதலில் ‛பியார் பிரேமா காதல்' இப்போது ‛பியார் பிரேமா கல்யாணம்' | ஜெயிலர் 2 படத்தில் சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி தரும் வித்யாபாலன் | மீசைய முறுக்கு 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | வராது... ஆனா வரும்! பாஸ்கியுடன் ஒரு 'கலகல' | இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் 'மதராஸி' | தீபாவளி போட்டியில் இதுவரையில் 5 படங்கள் |
எ கியூப் மூவீஸ் ஆப் நிறுவனம் தயாரிக்கும் படம் 'எக்ஸ் ஆர்மி'. இதில் ஜெய் ஆகாஷ் முன்னாள் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். கதாநாயகிகளாக அஷ்மிதா, அக்ஷயா நடிக்கிறார்கள். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், ராஜ்மித்ரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சாய்பிரபா மீனா இயக்குகிறார். ஏ.சி.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.சதீஷ் குமார் இசை அமைக்கிறார்.
படம் பற்றி ஜெய் ஆகாஷ் கூறியதாவது: ராணுவத்தில் பணிபுரிந்து ஓயுவு பெறும் வீரர் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்களை கண்டு ஆவேசம் அடைகிறார். அதை தட்டி கேட்க முடிவு செய்து ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றிய எக்ஸ் ஆர்மி மேன்கள், மற்றும் போரில் காயம் அடைந்து ஊனமுற்று இன்னும் தேச பக்தியுடன் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களை ஒரு படைபோல் திரட்டி பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் அக்கிரமக்காரர்களை தேடிப் பிடித்து எப்படி பழிவாங்குகிறார் என்பதை ஆக்ஷன் அதிரடியுடன் இப்படம் சொல்கிறது.
எல்லையை காப்பாற்றியவர்கள் நாட்டுக்குள் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்டு அவர்களை எப்படி காக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மையக்கரு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, பெங்களுர், மும்பையில் நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வருகிறது. என்றார் ஜெய் ஆகாஷ்.