‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
ஈரம், அனந்தபுரத்து வீடு, அழகிய அசுரா படங்களில் நடித்தவர் கிருஷ்ணா. சினிமா வாய்ப்பு குறைந்ததும் சின்னத்திரை தொடர்களில் நடித்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். அஷ்டலக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள 'பல்லவபுரம் மனை எண் 666' என்ற படத்தில் நடிக்கிறார். இதனை ரிஷி இயக்குகிறார்.
ஆண்டவ பெருமாள், இருக்கு ஆனா இல்ல, பனிவிழும் நிலவு, திரைக்கு வராத கதை, ழகரம், துரிதம் போன்ற படங்களில் நாயகியாக நடித்த ஈடன் இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். மற்றும் ரேகா சுரேஷ், சுனில், மாலா, நேகா, ஸ்ரீஜித், ராம்கி, சுதந்திரம், சோலை ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லாளன் ஒளிப்பதிவு செய்கிறார், மாருதி நம்பி இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ரிஷி கூறியதாவது: வெளிநாட்டில் பணிபுரியும் தருண் (கிருஷ்ணா). மனைவி இறந்த பிறகு, தனது 6 வயது குழந்தை ஜனனியை (நேகா) கவனித்துக்கொள்ள, சினேகாவை (ஈடன்) திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் ஜனனி, சினேகாவை தன் தாயாக கருதாமல், சித்தியாகவே பாவிக்கிறாள். ஜனனி தன் தோட்டத்தில் இருந்த ரோஜா பூவுடன் உறவை வளர்த்து, அதை தன் தாயாக கருதி, அந்த ரோஜாவை அம்மா என்று அழைக்கிறாள்.
அந்த ரோஜா, ஓர் ஆன்மாவால் ஆட்கொள்ளப்பட்டிருந்தது. ஜனனி ரோஜாவின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தாள், அந்த ரோஜாவும், ஜனனியை தன் மகளாகவே கருதியது. ஒரு தாயாக, அனைத்து இன்பங்களையும், அரவணைப்பையும் ஜனனிக்கு கொடுக்கிறது. ஜனனி மீது அன்பு செலுத்தும் ஆன்மா, அவள் தந்தையை பழி வாங்க துடிக்கிறது? தருண் என்ன தவறு செய்தான்? தருண் அந்த ஆன்மாவிடமிருந்து தப்பிப்பிழைத்தானா? இக்கேள்விகளுக்கான விடையே 'பல்லவபுரம் மனை எண் 666' படம். என்றார்.