பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் |
தென்னிந்திய சினிமாக்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், சமீபத்தில் கர்நாடகா மாநிலம் சிவ மொக்காவில் உள்ள ஒரு கல்லூரியில், தியேட்டர் வசனம், சினிமா, சமூகம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். ஆனால் கல்லூரிக்கு தொடர்பில்லாத தனியார் நிகழ்ச்சியை எப்படி கல்லூரி வளாக்கத்திற்குள் நடத்தலாம் என்று அதற்கு எதிராக அந்த கல்லூரியை சேர்ந்த சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அதோடு நடிகர் பிரகாஷ்ராஜ் கல்லூரிக்கு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
ஆனபோதிலும் மாணவர்களின் எதிர்ப்பை மீறி இந்த நிகழ்ச்சியில் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து அந்த நிகழ்ச்சி முடிந்து பிரகாஷ்ராஜ் அங்கிருந்து வெளியேறியதும், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மாணவர்கள், அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கோமியத்தை கொண்டு வந்து தெளித்து சுத்தம் செய்து உள்ளார்கள். அது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.