நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படம் இந்த வாரம் ஆகஸ்ட் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இப்படம் குறித்து, ‛‛இது ஜெயிலர் வாரம்''என தனுஷ் பதிவிட்டுள்ளார்.
ரஜினியின் மூத்த மருமகனான தனுஷ், அவரது மனைவியும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யாவைப் பிரிந்துவிட்டார் என்று சொல்லப்பட்டாலும் தன்னை ரஜினியின் ரசிகர் என இந்தப் பதிவின் மூலம் அவர் காட்டியிருக்கிறார். 'தலைவரின் ரசிகர் தனுஷ்' என தனுஷின் பதிவில் ரஜினி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ள கன்னட நடிகரான சிவராஜ்குமார், மேடையில் “தனுஷை ரொம்பப் பிடிக்கும்” என ரஜினிகாந்த் முன்னிலையில் பேசினார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அப்போது பார்வையாளர்கள் இருக்கையில் ஐஸ்வர்யா உள்ளிட்ட ரஜினி குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.