தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி | 'தாய்கிழவி' 22 கோடி.. 'வித் லவ்' 35 கோடி | பிளாஷ்பேக் : பாலுமகேந்திராவின் நிறைவேறாத சிவாஜி கனவு | பிளாஷ்பேக் : பாட வந்தவர் நடிகை ஆனார் | அமரனில் மிஸ் ஆச்சு... சேயோனில் அது நடக்குமா? | இயக்குனர் விஜய் என் வழிகாட்டி : ஜியா சங்கர் நெகிழ்ச்சி | நடிகை ஸ்ருதிகாவுக்கு வைரஸ் காய்ச்சல் | மறைந்த இயக்குனர் குடும்பத்துக்கு நிதி உதவி: மேடையிலே செக் கொடுத்தார் யோகி பாபு |

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படம் வருகிற 10-ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினி. இந்த படத்தையடுத்து ஞானவேல் இயக்கும் தனது 170 வது படத்தில் நடிக்கப் போகிறார். ரஜினியுடன், அமிதாப்பச்சன், நானி, பகத்பாசில் என பலர் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது கூத்துப்பட்டறையை சார்ந்த பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கயிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த கதாபாத்திரங்களில் புதுமுகங்களை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த ஞானவேல், புதுமுகங்கள் அதிகப்படியான டேக் வாங்கினால் அது ரஜினியையும் கஷ்டப்படுத்தும். இதனால் ஏற்கனவே கூத்து பட்டறையில் பயிற்சி பெற்று பல படங்களில் நடித்த சிறந்த கலைஞர்களை இந்த படத்தில் ரஜினி உடன் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளாராம்.




